Friday, April 24, 2009

சென்னையை வீழ்த்திய டெல்லி-கொல்கத்தாவும் வீழ்ச்சி

Indian Premier League 2009 news in tamil, IPL 2009 stills - IPL 2009 SCORECARD

டர்பன்: டிவிலியர்ஸ் சதம் அடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் டுவென்டி-20 போட்டியில் டெல்லி டேர் டெவில்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. பரபரப்பான மற்றொரு போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.

ஐபிஎல் தொடர் தென் ஆப்ரிக்காவில் நடக்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி டேர் டெவில்ஸ் அணிகள் மோதின.




டாஸ் வென்ற ஷேவாக் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். துவக்க வீரர்களாக களமிறங்கிய ஷேவாக் (6), கம்பீர் (0) விரைவில் அவுட்டானார்கள்.

அடுத்து வந்த தில்ஷன் அதிரடியாக விளையாடினார். அவர் 2 சிக்சர், 7 பவுண்டரி உட்பட 27 பந்தில் 50 ரன்கள் எடுத்து அவுட்டானார். தினேஷ் கார்த்திக் 18 ரன்கள் எடுத்தார்.

மறுமுனையில் சிறப்பாக விளையாடிய டிவிலியர்ஸ் 6 சிக்சர், 5 பவுண்டரிகளின் உதவியுடன் சதம் கடந்தார். அவர் 54 பந்தில் 105 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். டெல்லி டேர் டெவில்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது.

ஹைடன் அசத்தல்...



கடின இலக்கை சேஸ் செய்த சென்னை அணிக்கு ஹைடன் நல்ல துவக்கம் தந்தார். அவர் 27 பந்தில் 57 ரன்கள் எடுத்தார். பார்த்திவ் 16, தோனி 5 ரன்களுக்கு அவுட்டாகி ஏமாற்றினர்.

அதிரடியாக விளையாடி ரெய்னா 27 பந்தில் 41 ரன்கள் எடுத்தார்.

பிளின்டாப் 16, பத்ரிநாத் 7 ரன்களுக்கு அவுட்டானார். மற்றவர்கள் வந்த வேகத்தில் அவுட்டாக சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

'சூப்பர் ஓவரில்' ராஜஸ்தான் வெற்றி...

மற்றொரு போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதி்ர்கொண்டது. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது.

அடுத்து பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுக்க ஆட்டம் டை ஆனது. இதையடுத்து 'சூப்பர் ஓவர்' முறை பயன்படுத்தப்பட்டது.

இதில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணிக்கு கெய்ல் 15 ரன்கள் பெற்றுதந்தார். அடுத்து 'சூப்பர் ஓவர்' களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு 16 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ராஜஸ்தான் அணி சார்பில் யூசுப் பதான் பேட் செய்தார். அதிரடி காட்டிய பதான் முதல் பந்தை சிக்சருக்கு விரட்டினார். அடுத்த மூன்று பந்துகளில் 2,6,4 ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றி தேடி தந்தார்.

DiggIt!Add to del.icio.usAdd to Technorati FavesRedditStumble ThisAdd to Google BookmarksAdd to Yahoo MyWebSlashdot it